பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
லாரிகளுக்கு இடையே சிக்கிய 5 பேர் உடல் நசுங்கி கோர மரணம்: அப்பளம்போல நொறுங்கிய ஆட்டோ...! நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா, சிக்கந்தரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி ஆட்டோ மீது மோதி ஏற்பட்ட விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
8 பயணிகளுடன் பயணம் செய்த ஆட்டோ, குருத்வரா பகுதியில் சென்றபோது லாரி ஆட்டோ மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள், 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தலை மற்றும் உடல் முற்றிலும் சிதைந்த நிலையில் கொடூர மரணம் ஏற்பட்டு இருந்தது.
இரண்டு லாரிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது. லாரி ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட, அங்கு உயிருக்கு போராடிய மக்களுக்கு யாரும் உதவக்கூட முன்வரவில்லை. பலரும் செல்போனில் வீடியோ எடுத்து இருக்கின்றனர்.
விபத்தில் தனது மனைவியை இழந்த கணவர், 15 நிமிடங்கள் மக்களின் உதவிக்காக மன்றாடியும் பலன் இல்லை. காவல் துறையினரும் விரைந்து நிகழ்விடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சாலையில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சுமார் 2 மணிநேரம் கழித்தே அங்கு போக்குவரத்து என்பது சீர்படுத்தப்பட்டுள்ளது. இரத்தமும், சதையுமாக உடல் நசுங்கி ஏற்பட்ட கொடூர மரணத்தின் தாக்கம் நேரில் பார்த்த சிலரை பதறவைத்துள்ளது.