மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொழிலதிபரின் 8 வயது மகன் கடத்தி கொலை?.. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி, கிச்சுடி பஜார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குப்தா. இவர் தொழிலதிபர் ஆவார். இவருக்கு 8 வயதுடைய ராஜ் குப்தா என்ற மகன் இருக்கிறார்.
நேற்று முன்தினம் சிறுவன் மாயமான நிலையில், பதறிப்போன தந்தை மகனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் அங்குள்ள தருண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுவனின் சடலம் அங்குள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட 8 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டு இருக்கின்றன. இதனால் சிறுவனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.