#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வீரப்பன் மகள்; நாம் தமிழர் சார்பில் போட்டி.!
2024 மக்களவை தேர்தல், தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தலைமையில் வேட்பாளர்கள் தனித்தனியே களம்காண்கின்றனர்.
இதில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுவதால், தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
இன்று எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் மறைந்த சந்தனமரகடத்தல் குற்றவாளி வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி சார்பில் அவர் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வித்யாராணி பாஜகவில் இணைந்த நிலையில், அவர் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காத காரணத்தால் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவர் நாம் தமிழர் சார்பில் போட்டியிடுகிறார்.