மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா எதிரொலி: காய்கறி விலை அசுர வீழ்ச்சி! தொடர்ந்து நீடிக்குமா?
வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி, பெரிய வெங்காயம் தலா ரூ.10-க்கு விற்பனை ஆகிறது.
உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து வருவதால் தமிழகத்திலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது
இந்தநிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 தினங்களாக காய்கறி விலை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 முதல் ரூ.14 வரையிலும், ஒரு கிலோ தக்காளி, கேரட், பீட்ரூட் தலா ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பல காய்கறிகளின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக உள்ளதன் காரணமாகவே விலைவாசி குறைந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், “காய்கறி அளவுக்கு அதிகமாக கடைகளில் சேர்ந்து இருப்பதால், விலையை குறைத்து இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகிறோம். இனி வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.