மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏசுநாதர் சிலுவையைச் சுமந்ததுபோல் நான் உங்களை சுமக்கிறேன்.! மக்களை உருகவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்தநிலையில், விராலிமலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தின்போது இதற்க்கு முன்னர் அப்பகுதி மக்களுக்கு செய்த உதவிகளை சுட்டிக்காட்டி, இப்பகுதி மக்களுக்காக தொடர்ந்து உதவி செய்வேன் என தெரிவித்தார். இந்தநிலையில் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், மக்களைச் சந்தித்து கண்ணீர்மல்க சென்டிமென்ட்டாகப் பேசி மக்களைக் கவர்ந்து வருகிறார். அதேபோல் விஜயபாஸ்கரும் சென்டிமென்ட்டாகப் பேசிவருகிறார்.
இந்தநிலையில், விராலிமலை தொகுதி ராசநாயக்கன்பட்டி மாதா கோயில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது விஜயபாஸ்கர், எனக்கும் சுகர் இருக்கு, நானும் மாத்திரை சாப்பிடுறேன். ஆனால் எடுத்துக்கிட்ட பொறுப்புல வேலையை ஒழுங்காக செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் ஏசு என்னையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த மக்களுக்காக ஏசுநாதர் சிலுவையைச் சுமந்த மாதிரி இந்த விராலிமலைத் தொகுதியை நான் சுமந்துகொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.