#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
அடிதூள்... இரட்டை இலைக்கு போட்டியாக இரட்டை ரோஜா சின்னத்துடன் உதயமானது புதிய கட்சி..!

தமிழக அரசியல் மண் எப்போதும் நம்மிடையே புதுப்புது கட்சிகளை அறிமுகம் செய்துகொண்டு இருக்கிறது. பெரிய அளவிலான கட்சிகளில் இருந்து, சிறிய அளவிலான கட்சிகள் வரை ஒவ்வொரு தேர்தலுக்கும் காட்சிகள் மாறுபடுகின்றன.
தற்போது தமிழகத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் வழியில் என தற்போது வரை பல கட்சிகள் அதிமுக ஒத்த மற்றும் மேலோட்ட கருத்து வேறுபாடுகளுடன் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தன்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு அகில இந்திய எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இரட்டை இலைக்கு போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் கொண்டு களமிறங்கும் ஜெயலட்சுமி, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.