திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடுகளில் ஜொலிக்கும் விநாயகர்! சாமி தரிசனம் செய்து மக்கள் வழிபாடு!
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அதற்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். சில இடங்களில் இப்படி வைக்கப்பட்டு வழிபடப்படும் பெரிய சிலைகள் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், கண்மாய், ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த ஆண்டு மிக எளிமையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிகழவுள்ளன.. மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். மேலும், சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.