மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுத்தியால் தாக்கிய வாலிபர்; ரத்த வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!,..காதல் தகராறு காரணமா..?
இளம் பெண்ணை சுத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபரால் விருத்தாசலம் அருகே பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கார்மாங்குடி வெள்ளாற்றின் அருகே வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சுத்தியால் தாக்கியுள்ளார். அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் கூச்சலிட அப்போது அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் சென்றபோது பெண்ணை தாக்கிய வாலிபர் தப்பி ஓடியுள்ளார். அந்தப் பெண் ரத்தவெள்ளத்தில் முட்புதர் அருகே கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அங்கே இருந்தவர்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அந்த இளம்பெண் தலை முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு கைகளிலும் காயம் ஏற்பட்டிருந்ததால் பின்னர் அந்த இளம் பெண்ணை மேல்சி கிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண்னை தாக்கிய இடத்தில் இரண்டு பைகள் செல்போன் மற்றும் சுத்தி வாலிபர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றிய கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பையில் அடையாள அட்டை ஒன்று இருந்துள்ளது. அதில் கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பலவாணன் மகன் ஸ்ரீதர் என்பவரின் அடையாள அட்டை என்பது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டிற்கு காவல்துறையினர் விசாரணை செய்ய சென்றபோது ஸ்ரீதர் என்ற வாலிபர் வீட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெண் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளம்பெண்ணும் அந்த வாலிபருக்கும் காதல் தகராறா இல்லை வேறு ஏதாவது முன்விரோதம் இருந்துள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வாலிபர் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு சுத்தி எடுத்துவந்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.