திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடிக்குற இடமா அது? ஆணுறுப்பை கடித்த நபர்; சண்டையில் அரங்கேறிய வினோத சம்பவம்..!
நிலத்தகராறில் உருவான சண்டையில் நபர் ஒருவர் 50 வயது நபரின் ஆணுறுப்பை கடித்த சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, மலையடிப்பட்டி பகுதியில் வசித்துவ வருபவர் வெங்கடேஷ் (50). இதே ஊரில் வசித்து வருபவர் சீனிவாசன். உறவினர்களாக இருந்தபோதிலும், இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதமானது இருந்து வந்துள்ளது.
ஆணுறுப்பை கடித்த பகீர் சம்பவம்
அவ்வப்போது இவர்களுக்கு இடையே மோதல் சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த மோதலில், வெங்கடேஷின் ஆணுறுப்பை சீனிவாசன் கடித்து காயப்படுத்தி இருக்கிறார். இதனால் கதறிய வெங்கடேஷை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: "இது என் ஊரு., உயிரோட இருக்கமாட்டிங்க" - இரயில் பயணியிடம் போதையில் தகராறு செய்த இளைஞர்கள்.!!
காவல்துறையினர் விசாரணை
பின் இந்த விஷயம் குறித்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் வெங்கடேஷ் தரப்பினர் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு உதவியாக இருந்த 2 கூட்டாளிகளின் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: வடகலை Vs தென்கலை மோதலில்., நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை.! தலையில் அடித்து வேதனையுடன் சென்ற பக்தர்கள்.!