மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதேய்... தற்கொலை செய்துக்கொள்ள வயாகரா வா.? நடந்தது என்ன !
சென்னையில் மாமியார் கொடுத்த புகாரை தொடர்ந்து மருமகனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்ச்செல்வன் என்பவர் சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவில் வசித்து வருகிறார் இவர் சினிமா ப்ரொடக்ஷனில் வேலை செய்து வருபவர். இவருக்கு பானுமதி என்ற மனைவியும் புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவர்களது மகள் புவனேஸ்வரிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரையைச் சார்ந்த மென்பொறியாளர் ராஜசேகர் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
புவனேஸ்வரி தனது பெற்றோருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த போது வங்கியில் லோன் வாங்கி இருக்கின்றனர் அது தொடர்பாக பேசுவதற்காக புவனேஸ்வரி வீட்டிற்கு வந்திருக்கிறார் ராஜசேகர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரியின் தாயார் பானுமதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு ராஜசேகர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ராஜசேகரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்று ராஜசேகர் திடீரென தனது கைகளை அறுத்துக் கொண்டார். மேலும் வயாகரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் காவல்துறையின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. அவர் மீது வன்கொடுமை தடுப்பு வரதட்சனை கொடுமை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.