#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசாங்கம் வழங்கும் இலவசங்கள் இவர்களுத்தான் தேவை! கமல் பேச்சு!
தமிழகத்தில் ஒவொரு முறை தேர்தல் வரும்போதும் பல்வேறு இலவசங்கள் வாரிவழங்கப்படும். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் வெளியனா சர்க்கார் திரைப்படத்தில் இத்தகைய இலவசங்களுக்கு எதிராக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசங்களை நெருப்பில் போட்டு எரிக்கும் காட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிராக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு இடங்களில் சர்க்கார் படத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது சர்க்கார் படக்குழு. இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று (நவ.10) உரையாற்றினார்.
இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாடுகையில், உழைக்கும் மக்களின் பணம்தான் அரசாங்கத்தின் கருவூலத்தை நிரப்புகிறது. அதனை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் காலி செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
இதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன எனவும் தெரிவித்தார்.
மேலும், பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை எனவும், உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.