நீதிக்காக போராடியவர்களை சுட்டுக்கொன்ற காவல்துறை ஹெச் ராஜா வின் பேச்சை மட்டும் கேட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? முன்னணி நடிகர் கேள்வி



why-tnpolice-just-watching-h-raja-while-shot-protesters

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா காவல்துறையினரிடம் பேசியதைப் பற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஹெச் ராஜா தலைமையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் ஒரு குறிப்பிட்ட வழியில் ஊர்வலத்தை நடத்திச் செல்ல காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எச் ராஜா  காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் அப்போது பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

actor sidharth

இந்த வீடியோவில் எச் ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவர் மீது பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய இந்த சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய எச் ராஜா தான் பேசிய வீடியோ உண்மையானது அல்ல அதை எடிட் செய்து பரப்பி விடுகின்றனர் என்று மறுத்துள்ளார்.

actor sidharth

இவ்வாறு பேசியுள்ள ஹெச் ராஜா மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த நிகழ்வை பற்றி நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் "நீதிக்காக போராடிய மக்களை சுட்டுக்கொன்ற தமிழ்நாடு காவல்துறை, ஹெச் ராஜா இதைப் போன்று காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை  அவமதிக்கும் விதமாக பேசியுள்ளதை வேடிக்கை பார்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இதைப் போன்ற ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு அரசியல் சட்டத்தின் மூலம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.