96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தால் உயிர் போய்விடுமா..? விளையாட்டாக பேசிய ஐ.டி ஊழியர்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் புவனேஷ். இவர் ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பங்குச்சந்தையில் 30 லட்சத்திற்கும் மேலாக முதலீடு செய்து கடனாளியானதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த கடனை அடைப்பதற்காக வங்கியில் வாங்கிய 10 லட்சத்தை அடைக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனால் மிகுந்த மன வேதணையில் இருந்த புவனேஷ் தனது நண்பர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். அப்போது தனது நண்பர்களிடம் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தால் உயிர் போய் விடுமா என்று விளையாட்டாக பேசியுள்ளார். இதனைதொடர்ந்து சிறிது நேரத்தில் சென்னை துரைபாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து புவனேஷின் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் புவனேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.