மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப தகராறில் மனைவி கொடூர கொலை.!! தப்பியோடிய ஜோதிடருக்கு வலை வீச்சு.!!
திருச்சி மாவட்டம் லால்குடியில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய கணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜோசியக்காரர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜோதிடம் பார்ப்பதை தொழிலாக கொண்டுள்ள ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது.
குடும்பத்தில் தகராறு
ராஜேஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து துன்புறுத்துவதால் கணவனிடம் பலமுறை அனுசியா சண்டை போட்டு இருக்கிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவும் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார் ஜோதிடர் ராஜேஷ்.
இதையும் படிங்க: தந்தை உயிரிழப்பால் வேதனை: மகனும் வருத்தத்தில் விபரீதம்.!
கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்
இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் நள்ளிரவில் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியை கடுமையாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து அனுசியாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இறந்த அனுசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் மரணம்; போதையில் தள்ளாடி சோகம்.. இழப்பீடு கேட்கும் இ.பி.எஸ்.!