ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மரணிக்கும் தருவாயில் கோடி மதிப்புள்ள சொத்துக்களை புற்றுநோய் மையத்துக்கு எழுதி வைத்த பெண்மணி.. ஆவடியில் ஒரு அன்னை.!
தனது குடும்ப உறுப்பினர்கள் அடுத்தது உயிரிழக்க, இறுதியாக உயிரை கையில் பிடித்த பெண்மணியும் இறப்புக்கு முன் சொத்துக்களை புற்றுநோய் மையத்திற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மரணித்த சோகம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி குப்பம்மாள். தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு பிள்ளைகளும் திருமணம் முடிக்காமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பிற நான்கு குழந்தைகளில் ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர். குடும்பத்தில் கடைசி மகளாக இருந்து வந்த சுந்தரி பாய் மற்றும் அவரது அக்கா ஜானகி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜானகி உயிரிழந்திருக்கிறார்.
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், பிப்ரவரி 17ஆம் தேதி சுந்தரியும் உயிரிழந்திருக்கிறார். இவர் இறப்புக்கு முன்னதாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தனது வீடு, 54 சவரன் நகை, வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருக்கும் ரூபாய் 61 லட்சம் பணம் ஆகியவை காஞ்சிபுரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுத்து விட வேண்டும். எனது எதிர் வீடு மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து விடுங்கள்.
எனது வீட்டில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட பூனைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய ஆவடி காவல்துறையினர், நேற்று அவரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் நகைகள், ஆதார் & ரேஷன் கார்டுகளை ஆவடி துணை வட்டாட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.