திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேள்வி கேட்ட பெண் மீது பாஜகவினர் சரமாரி தாக்குதல்? திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.!
2024 மக்களவை தேர்தல் வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மாநில அளவில் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணியும், தேசிய அளவில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணிகளும் கடுமையான வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறது.
ஒருசில இடங்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் மக்கள் கேள்வி எழுப்புவதும், விரட்டியடிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருப்பினும் வாக்கு சேகரிப்பு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அச்சமயம் பெண்மணி ஒருவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்ப, பாஜகவினர் அதற்கு பதில் அளித்ததாக தெரியவருகிறது.
அப்போது இருதரப்பு இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், பாஜகவினர் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக பெண் பதிவு செய்த காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.