மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவருடன் சேர்ந்து வைர கம்மல், 53 சவரன் நகைகையை களவாடிய பணிப்பெண்.. உண்டவீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்.!
தான் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த வீட்டில் பெண்மணி கணவருடன் சேர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் வசித்து வருபவர் ரகுபதி. இவர் தொழிலதிபர் ஆவார். சம்பவத்தன்று குடும்பத்தோடு வெளியூருக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் நகைகளை கழற்றி பீரோவில் வைத்துவிட்டு சென்ற நிலையில், மீண்டும் வந்து பார்க்கையில் வைர கம்மல், 53 சவரன் நகை மாயமானது உறுதியானது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த மகேஸ்வரி மற்றும் அவரின் கணவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.