தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அடுத்த அதிர்ச்சி!! கறுப்பு, வெள்ளை பூஞ்சையைவிட மிக மோசமான மஞ்சள் பூஞ்சை தொற்று!! அச்சத்தில் மக்கள்
உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராதநிலையில் தற்போது கலர் கலரான பூஞ்சை நோய்கள் மக்களை மேலும் அச்சமடையவைத்துள்ளது. மனிதர்களின் சளி, காற்று, மண், தாவரங்கள், உணவு, அழுகிய பழங்களில் காணப்படும் பூஞ்சைகளில் இருந்து இந்த பூஞ்சை தொற்று உருவாகிறது. இவை மனிதர்களை தாக்கும்போது அதன் தீவிரத்தன்மை குறைவுதான்.
ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீண்டகாலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஸ்டீராய்ட் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களை இந்த கருப்பு பூஞ்சை அதிகமாக தாக்குகிறது. தமிழகத்தில் கூட இந்த கருப்பு பூஞ்சை தொற்று பரவலாக அறியப்பட்டுவருகிறது.
கறுப்பு பூஞ்சையை விட மோசமான வெள்ளை பூஞ்சை தொற்று பீகாரின் பாட்னாவில் பதிவாகின. இந்நிலையில் கருப்பு, வெள்ளை பூஞ்சை தொற்றுக்களை விட மிக அதிக பாதிப்பை தரக்கூடிய மஞ்சள் பூஞ்சை தொற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.