மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடம்பர காரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
சென்னையில் ஆடி கார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் ரகசியமாக விசாரணை செய்து வந்தனர்.
இதனையடுத்து ஆடி காரில் வந்த இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த போது, கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல கண்ணன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.