கொரோனா அச்சுறுத்தல்: கண்டுகொள்ளாத பாச்சிக்கோட்டை ஊராட்சி! பாப்பான்விடுதி இளைஞர்களின் அசத்தல்!



Youngsters work for corona relief

சீனாவில் தொடங்கிய கொரோனோ இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. 

Corana

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பாச்சிகோட்டை ஊராட்சி பாப்பான்விடுதி கிராமத்தில் சேவாபாரதி சார்பாக வைரஸ் நோய் பரவாமல் தடுக்க பிளீச்சிங் பவுடர் மற்றும் மருந்துகள் கிராமம் முழுவதும் தெளிக்கப்பட்டு உள்ளது. பாப்பான் விடுதி கிராமத்தை தவிர மற்ற நபர்கள் யாரும் ஊருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு சேவாபாரதி இளைஞர்கள் தீவிர செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாச்சிகோட்டை ஊராட்சி சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாப்பான்விடுதி சேவாபாரதி இளைஞர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுவரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.