மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் உட்பட 2 பேரை கொன்ற யானையை பிடிக்க தீவிர கண்காணிப்பு: 4 கும்கி யானைகள் வரவழைப்பு..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலியில் உள்ள ஆரூற்றுப்பாறையில் டீ கடை நடத்தி வந்த ஆனந்த் என்பவர் கடந்த 26ம் தேதி காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். இதற்கிடையில், காட்டுயானையை கும்கிகள் உதவியுடன் பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அன்று இரவே முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் என்ற இரண்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டன.
கும்கிகள் மூலம் காட்டுயானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அடுத்த நாள் (27ம் தேதி) இரவு அதே பகுதியில் உள்ள பாரம் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் மும்தாஜ் என்ற பெண்ணை மற்றொரு காட்டுயானை தாக்கி கொன்றது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதுமலையில் இருந்து சங்கர், கிருஷ்ணா என்ற மேலும் இரண்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகள் பாரம் தனியார் தோட்டத்தை ஒட்டிய லாரன்ஸ்டன் நம்பர் 4 பகுதிக்கு அழைத்து வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ட்ரோன் கேமரா மூலமும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரூற்றுபாறை பகுதியில் டீக்கடைக்கார் ஆனந்த்தை கொன்ற காட்டு யானையின் நடமாட்டம் குறித்த தகவல்கள் வனத்துறை மூலம் உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் சார்பில் கூறப்படுகிறது.