மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையால் விபரீதம்... 3 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர் உடல்... நண்பர்கள் கைது.!
மீஞ்சூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து இருக்கும் காவல்துறையினர் தப்பியோடிய மற்ற குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் அஜித். 25 வயதான இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீஞ்சூர் ரெட்டியார் பாளையம் அருகே உள்ள ஏரிக்கரையில் மது அருந்தி இருக்கிறார். அப்போது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அஜித்தின் நண்பர்கள் அவரை கொலை செய்து கை கால்களை கட்டி உடலை கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அஜித்தின் தந்தை அளித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் நாகராஜ் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அஜித்தின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மோகன், சாய் கணேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதால் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.