மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர்... குடும்பத்தினர் அதிர்ச்சி.! விசாரணையில் காவல்துறை.!
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவரது மகன் தனீஷ். இவர் கடந்த ஆண்டு கொத்தனார் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்று இருக்கிறார். அங்கே சரியான வேலை கிடைக்காததாலும் சம்பளம் குறைவாக இருந்ததாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் தனீஷ் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வீட்டில் ஆள் இல்லாத நேரம் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த தனீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.