டிக் டாக்கிற்கு வருகிறது ஆப்பு! அதிர்ச்சியில் டிக் டாக் விரும்பிகள்!



Ban to tik tok


 

இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரிடத்திலும் பிரபலமாக இருப்பது இந்த டிக் டாக். சினிமா, சீரியல் என பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் கூட இந்த டிக் டாக் ஆப்பிற்கு அடிமையாகி உள்ளனர். புது புது விடீயோக்கள் போடுவது, ரசிகர்களை கவர்வது என நாளுக்கு நாள் புது புது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

tik tok

இந்த வழக்கின் விசாரணையில் இணையதளத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேபோல் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொண்டு வரக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நீதிமன்றம்தான் தடை விதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் வழக்கறிஞர்கள், பிராங்க் ஷோ என்று சொல்லக்கூடிய குறும்பு வீடியோக்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியாமல் படம் பிடிப்பதால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒருசிலர் இந்த சம்பவங்களால் உயிரிழந்தும் உள்ளனர். எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் முறையிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.