பூமியை விட வியாழன் கிரகத்தில் பலமடங்கு தண்ணீர் உள்ளதாம்! ஆச்சரியத்தில் நாசா விஞ்ஞானிகள்!



Nasa scientists found Jupiter has more water than earth

உலக நாடுகள் அனைத்துமே விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பூமியை விட அதிக அளவு தண்ணீர் வியாழன் கிரகத்தில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1995ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி, ‘கலிலியோ’ என்ற விண்கலத்தை வியாழன் கிரகத்தை நோக்கி சோதனைக்காக அனுப்பியது.

இந்த விண்கலம் தற்போது பெரிய சிகப்பு புள்ளி ஒன்றை வியாழன் கிரகத்தில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Space news

வியாழன் கிரகத்தில் சூரியனை விட அதிக ஆக்ஸிஜன் இருப்பதாகவும், பூமியை விட வளிமண்டலம் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் வியாழனில் நிச்சயம் பூமியை வீட்டா அதிக அளவு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனை குறிக்கும் வகையில் வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி உள்ளது. இது ஆசிய கண்டத்தை விட பெரியதாக இருக்கும். இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பியுள்ளது.

இதனை விஞ்ஞானிகள் அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.

மேலும் வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்பதால், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.