விளம்பரமே வராமல் YouTube வீடியோ பார்ப்பது எப்படி? வந்துவிட்டது புது வழி! இதோ!
YouTube வலைதள வாசிகள் அனைவர்க்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றுதான் இந்த YouTube . கூகிள் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த YouTube அதன் பயனாளர்களுக்கு ஏகப்பட்ட விடீயோக்களை இலவசமாக வழங்கிவருகின்றது. பொழுதுபோக்கு, படிப்பு, தொழில், அறிவு சார்ந்த விஷயங்கள் இப்படி பல்வேறு விஷயங்களுக்கு உதவிகரமாக உள்ளது இந்த YouTube .
அதிலும் சினிமா துறையில் YouTube யின் பங்கு மிகவும் முக்கியமானது. புதிதாக வெளியாகும் டீசர், ட்ரைலர், பாட்லகள் என அனைத்தும் YouTube மூலம்தான் வெளியிடப்படுகிறது. சமைக்க தெரியலையா? உடனே YouTube பாரு என்று சொல்லும் அளவிற்கு YouTube கிராமப்புறங்களில் கூட வளர்ச்சி பெற்றுவிட்டது.
இதுபோன்று பல்வேறு விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் இந்த YouTube இல் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது அதில் வரும் விளம்பரங்கள்தான். சுவாரசியமாக வீடியோ பார்க்கும்போது திடீரென விளமப்ரம் தோன்றினாள் அது அனைவருக்கும் சற்று எரிச்சலை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
தற்போது இதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது YouTube நிறுவனம்.YouTube Premium என்னும் புது வசதியினை YouTube தொடங்கியுள்ளது. இதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் முதல் மூன்று மாதங்ககளுக்கு விளமபரமே இல்லாமல் நீங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும்.
மூன்று மாதம் முடிந்த பிறகு உங்களுக்கு தேவைப்பட்டால் ஒரு மாதத்திற்கு ரூபாய் 129 செலுத்தி இந்த சேவையை தொடரலாம். அல்லது இலவசமாக மூன்று மாதங்கள் பயன்பட்டுவிட்டு பின்னர் இந்த சேவையை நிறுத்திக்கொள்ளலாம்.