விநாயகர் ஊர்வலத்தில் நடக்கும் அவலம்; மேலே விநாயகர்; கீழே சரக்கு வெளியான வீடியோ!!



mixing brandy below vinayagar statue

ஒவ்வொரு ஆண்டும் இந்துக்கள் எத்தனையோ விழாக்கள் கொண்டாடினாலும் விநாயகர் சதுர்த்தி என்றால் அதற்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. ஏனெனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் ஊர்வலம் தான் இதற்கு காரணம். 

இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நடத்தக்கூடிய இந்த விநாயகர் ஊர்வலத்தில் ஆட்டம் பாட்டமும் குறைவின்றி இருக்கும். இவர்கள் விநாயகர் மேலிருக்கும் பக்தியைவிட தங்களது ஆதிக்கத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றே இந்த நிகழ்வுகளை நடத்துவது போல் அமையும்.

drinks in vinayagar oorvalam

காவலர்களின் பாதுகாப்போடு இந்த விநாயகர் ஊர்வலத்தில் இளைஞர்கள் செய்யும் ஒரு சில செயல்கள் பொது மக்களை பாதிப்பதுடன் சில நேரங்களில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இதனாலேயே இந்த ஊர்வலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 

புதுக்கோட்டையில் இந்த விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைக்க சென்ற பாஜக கட்சியின் எச் ராஜா காவலர்களை தவறான முறையில் பேசியிருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. எச் ராஜா வின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ள வீடியோவில் விநாயகர் ஊர்வலத்தில் நடக்கும் அவலத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விநாயகர் சிலையை ஏற்றிச் செல்லும் லாரியில் மேலே விநாயகரும், விநாயகருக்கு கீழே இருவர் அமர்ந்து மது அருந்தும் காட்சியும் பதிவாகி உள்ளது.