பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கிரிக்கெட் விளையாடும் விநாயகர்! வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சேவாக்
இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளான இன்று இந்த விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 28 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முக்கிய பிரபலங்கள் நாடு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை டிவீட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தனது
பாணியில் வித்தியாசமான புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் விநாயகர் கிரிக்கெட் ஆடுவதை போன்று படம் உள்ளது. கையில் பேட்டுடன் ஒரு விநாயகரும், விக்கெட் கீப்பராக மற்றொரு விநாயகரும் இருப்பது போன்று அந்த படம் உள்ளது. இதை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
May Lord Vighna Vinayaka remove all obstacles and shower you with love and joy. Ganpati Bappa Moraya, Mangal Murti Moraya . Happy #GaneshChaturthi pic.twitter.com/ZU15MmgeDs
— Virender Sehwag (@virendersehwag) September 13, 2018