96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
விவாகரத்து கேட்ட கணவனுக்கு ஆப்படித்த நீதிமன்றம்.. வீட்டுவேலை செய்ததற்கு ரூ.1.7 கோடி வழங்க அதிரடி உத்தரவு..!!
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் திருமணம் முடிந்து கடந்த 25 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அன்புடன் காதலித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இத்தகைய நிலையில் தம்பதிகளுக்கு சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கணவர் சார்பில் ஜீவனாம்சம் ஏதும் வழங்கப்படமாட்டாது என வாதிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மனைவியாக அந்த பெண்மணி கடந்த 25 ஆண்டுகளுக்கு வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்திருப்பார். அதற்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து ரூபாய் 1.7 கோடி ஜீவானம்சம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.