கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!



23 members death due to heavy rain in pakistan

பாகிஸ்தான் : பஞ்சாப் மாகாணத்தின் சேக்புரா மற்றும் நரோவல் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த வெல்லத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மேலும் 7 பேர் உட்பட 10 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்.

மேலும் அதே மாநிலத்தில், பல்வேறு பகுதிகளில் ஆறு பேர் மின்சாரம் தாக்கியும் மற்றும் ஏழு பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்திருக்கின்றனர். அது மட்டும் இன்றி நரோவல், லாகூர், சினியோட், சேக்புறா போன்ற பல்வேறு மாவட்டங்களில் மின் கசிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களால் 75க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து, வருகின்ற 30 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதனால், அனாவசிய  பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர், வாகனங்களே கவனமாக ஓட்டு மாறும், மின் கம்பங்களில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தேங்கி கிடைக்கும் தண்ணீரை அகற்றவும், மின் கம்பிகளை சரி செய்யவும் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பிரதமர் சபாஷ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.