வானில் நாளை நடக்கப்போகும் அதிசியம்.. 5 கிரகங்கள், ஒரே நேர்கோட்டில்.. மக்களே தவறவிடாதீர்கள்.!



5 Planets Align on 27 03 2023

 

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நாளை நிலவுக்கு அருகில் ஒரே வரிசையில் தோன்றவுள்ளன. 

நடப்பு வாரத்தில் செவ்வாய்கிழமையான நாளை கிரகங்கள் வரிசையாக கூடவுள்ளது என வானியல் விஞ்ஞானிகள் அறிவித்து இருக்கின்றனர். அதன்படி, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. 

இதனை காண விரும்புவோர் சூரிய மறைவுக்கு பின்னர் மேற்கு நோக்கி வானை தொலைநோக்கி கொண்டு காணலாம் என்றும், சூரியன் மறைந்த அரைமணிநேரம் மட்டுமே இதனை காண இயலும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

Earth

உலகின் எந்த மூலையில் இருந்தும் அதனை காணலாம் என்றும், வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் பிரகாசத்துடன் இருக்கும். செவ்வாய் நிலவுக்கு அருகே சிவப்பாய் தென்படும். புதன் மற்றும் யுரேனஸ் மட்டும் பார்வை குறைப்படுவது போல தோன்றும் என்று கூறுகின்றனர். 

யுரேனஸ் கிரகம் வெள்ளிக்கு மேலே பச்சை நிறத்தில் தென்படும். பல கிரகங்கள் இவ்வாறாக வானில் நேர்கோட்டில் சந்திப்பது இயல்பு என்றாலும், கடந்த ஆண்டின் கோடையில் மேற்கூறிய 5 கிரகங்கள் தோன்றின. பின் ஜூனில் மற்றொரு நிகழ்வு நடந்தது என ஆய்வளார்கள் கூறுகின்றனர்.