மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராணுவத்தின் இலக்கு மாறியதால் சோகம்: அப்பாவி பொதுமக்கள் 85 பேர் பலி.!
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப்போராட்டம் நடத்தி வரும் போராளி குழு தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் அவ்வப்போது அரசு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் உயிர் சேதமும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள கதுனா மாநிலத்தில் பயங்கரவாதிகள் குழு இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த குண்டுகள் நிறைந்த ட்ரோன் ஒன்றை அனுப்பி இருக்கிறது. ஆனால் இலக்கு தவறிவிடவே, துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது குண்டுகள் வெடித்து 85 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.