அடப்பாவமே... 4 பாட்டில் தண்ணீர் குடித்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை... நடந்தது என்ன.?
20 நிமிடங்களில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த அமெரிக்கப் பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிக அளவு வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நாடுகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அதிகமாக நிலவுகிறது. இதனால் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீரை குடித்து உடலின் நீர் சத்தினை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சார்ந்த 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடங்களில் 2 லிட்டர் தண்ணீரை குடித்து மயங்கி விழுந்தவர் சுயநினைவை இழந்து மரணம் அடைந்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அந்த பெண்ணின் சகோதரர் வெப்பத்திலிருந்து தப்பிக்க அதிக தண்ணீர் குடியுங்கள் என்று யாரோ சொன்னதை கேட்டு என் சகோதரி இவ்வாறு செய்திருக்கிறார். அவர் 2 லிட்டர் தண்ணீரை குடித்த பின் மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் அங்கு சென்ற பின்பும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னர் நிலைமை மோசமாகி அவர் உயிர் இழந்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவர் நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தும் அதிக அளவிலான தண்ணீரை குடிக்கும் போது சோடியம் இல்லாமல் போனால் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படும் என தெரிவித்திருக்கிறார்.