மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
800 பயணிகள் பயணித்த கப்பல் தீப்பிடித்து பெரும் விபத்து.. 40 பேர் பலி., பலர் மாயம்..!
வங்காளதேசம் நாட்டில் உள்ள தெற்கு பகுதியில், சுகந்தா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் மிகப்பெரிய பயணிகள் படகு பயணம் செய்த நிலையில், இன்று அதிகாலை படகு திடீரென தீப்பற்றி எரிந்தது.
வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் இருந்து பார்க்குணா நோக்கி பயணம் செய்த படகின் எஞ்சின் பகுதியில் தீப்பற்றி விபத்திற்குள்ளாகியுள்ளது. உறங்கிக்கொண்டு இருந்த பல பயணிகளும் தீயில் சிக்கி அலறித்துடித்த நிலையில், பலர் உயிர் பிழைக்க நினைத்து நீரில் குதித்து கரையேறியுள்ளனர்.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கப்பலில் பயணம் செய்த 40 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், சிலர் ஆற்றில் குதித்தும் உயிரிழந்துள்ளனர்.
தீக்காயத்துடன் மீட்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். பலரையும் காணவில்லை என்று கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. படகில் 800 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.