3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சரக்கு ரயில் தடம்புரண்டு கோரவிபத்து... 85 பயணிகள் படுகாயம்.! ஓட்டுநர் மரணம்..!
சரக்கு ரயில் தடம் புரண்டு, எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் எஞ்சின் டிரைவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பகுதியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் Sant Boi De Llobregat நகரில் உள்ள ரயில் நிலையத்தில் புறநகர் பயணிகள் ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்ப்பக்கமாக வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு புறநகர் பயணிகள் ரயிலின் மீது வேகமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் பயணிகள் ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ரயிலின் உள்ளே இருந்த 85 பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் மீட்புப்பணியினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியினர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.