ஆண்களின் அந்த விஷயத்தை கேலி செய்தால் பாலியல் குற்றம்... அதிரடி தீர்ப்பளித்த நீதிபதிகள் .!



england-office-labour-case-issue

பெண்களின் உடல் பாகங்களை கேலி செய்வது குற்றம் என்பது போல, ஆண்களின் வழுக்கையை கேலி செய்தால் பாலியல் குற்றம் என இங்கிலாந்து தீர்ப்பாயம் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள யார்ஷயர் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், 24 ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து வந்த ஒரு நபர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, 'தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தன் வழுக்கையை கேலி செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் நியாயமற்ற முறையில் தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் கூறியிருந்தார்'.boysபின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலை செய்யும் இடங்களில் உள்ள பெண்களின் உடல் பாகங்களை கேலி செய்வது எப்படி பாலியல் குற்றமோ, அதைப்போலவே ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றமாகும் என கூறியுள்ளனர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட நபருக்கு நிறுவனத்தின் சார்பாக இழப்பீடு வழங்க நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.