தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உலக நாடுகளிடையே அச்சம்... சீனாவில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா மரணம்..!
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் சீனாவின் ஊகான் மாகாணத்தில் 2019 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 30 அன்று கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அமைப்பு அவசர நிலையாகவும் மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இன்றைய நூற்றாண்டில் மிகக் கொடிய வைரஸ் ஆக கருதப்படுவது இந்த கொரோனா வைரஸ். இந்த வைரஸ் ஆனது சீனாவில் 6 மாதத்திற்கு பின் மீண்டும் தொற்று அதிகமாகி அதிக அளவு மரணத்தை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் பெய்ஜிங்கில் முதன்முறையாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே கொரோனா வைரஸிலிருந்து அந்நாட்டு மக்களை பாதுகாக்க சீன அரசு மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.