ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஆண்களை போன்று முகத்தில் தாடி வளர்க்கும் அதிசய பெண்! என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக பெண்களுக்கு அவர்களது தலைமுடி அழகு, அது போன்று ஆண்களுக்கு அவர்களது தாடி அழகு. பெண்களுக்கு தாடி வளர்வது இல்லை. ஆண்களுக்கு பெண்கள் அளவிற்கு முடி வளருவது இல்லை. இதுதான் மனித இனத்தின் நியதி.
ஆனால், பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண்களைப் போன்று முகத்திலும், மார்பு பகுதியிலும், கைளிலும் அதிகமாக முடிவுகள் வளர்ந்துள்ளன. இதனால் அவர் தற்போது முகத்தில் தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
ஹர்னம் கவுர் என்னும் 23 வயதாகும் இளம் பெண் ஒருவருக்குத்தான் இந்த சிக்கல் வந்துள்ளது. முதலில் இவர் 11 வயது ஆகும்போது இவரது கைகளிலும், மார்பிலும் முடிகள் வளர தொடங்கியுள்ளன. பின்னர் அதை தொடர்ந்து தற்போது அவரது முகத்திலும் அதிகாமாக முடிகள் வளர தொடங்கியுள்ளதாம்.
மிகவும் அபூர்வ குறைபாடு ஒன்றின் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இவர் படிக்கும் கல்லூரிகள், கோவில்கள், மேலும் எங்கு சென்றாலும் இவர்க்கு இடையூறாக உள்ளார்களாம். நிறைய கொலை மிரட்டல்கள் கூட வந்துள்ளதாம்.
நீண்டகாலமாக இந்த முடியை கத்தரித்து வந்த அவர் தற்போது சீக்கிய மதத்துக்கு மாறி சீக்கிய ஆண்களைப் போல் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.