96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஸ்பெயினில் கோர விபத்து... சினிமா பாணியில் 65 அடி உயரப் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்த பேருந்து.. பலி எண்ணிக்கை 6 அதிகரிப்பு ..!
ஸ்பெயினில் சுமார் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை இரவு விகோ நகரம் நோக்கி பேருந்து ஒன்று 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் மீது பேருந்து ஏறிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இதனையடுத்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் அதிகமான மழைப்பொழிவின் காரணமாக பேருந்தின் டயர்கள் வழுக்கியதால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும், பெண் பயணியும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டன. இந்நிலையில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாலும் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் 3 பேரின் உடல்கள் காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.