மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உறங்கிக்கொண்டு இருந்த இராணுவத்தினர் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 11 வீரர்கள் மரணம்.!
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகருக்கு வடக்கு பகுதியில் உள்ள இராணுவ முகாமில், நேற்று இரவு இராணுவ வீரர்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர், இராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கண்மூடித்தனமாக நடைபெற்ற தாக்குதலில், 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள தியாலா மாகாணத்தின் பாகுபா நகரின் வடக்கு திசையில் உள்ள அல்-அசீம் மாவட்டத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இராணுவம், பதில் தாக்குதல் நடத்தவும் ஆயத்தமாகி வருகிறது.