மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கிங்.!! உலக அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறதா.? உண்மையாகி வரும் பாபா வாங்கா கணிப்புகள்.!!
2024 ஆம் ஆண்டு நடக்கும் நிகழ்வுகள் பற்றி பாபா வாங்காவின் கணிப்புகள் நடந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல்கேரிய நாட்டைச் சேர்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா 1996 ஆம் வருடம் தனது 85 வது வயதில் உயிரிழந்தார். இவர் எதிர்காலத்தைப் பற்றி கணித்துக் கூறிய பல விஷயங்கள் நடைபெற்று இருக்கிறது.
அமெரிக்காவில் 9/11 நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் செர்னோபில் விபத்து மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவையும் இவரது கணிப்புப்படியே நடந்தது. தான் இறப்பதற்கு முன்பாக 2024 ஆம் வருடம் நடைபெற இருக்கும் நிகழ்வுகள் பற்றி இவர் கணித்திருக்கிறார். இந்த கணிப்புகள் தற்போது நடந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2024 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் வெப்ப நிலையில் கடும் மாற்றம் இருக்கும் என இவர் கூறியிருந்தார். அதேபோன்று உலகம் முழுவதிலும் அதிகப்படியான வெப்பம் நிலவி வருகிறது. மேலும் இந்த வருடத்தில் அதிகப்படியான இணையதள தாக்குதல்கள் நடைபெறும் எனவும் கணித்திருந்தார். அதேபோன்று அதிகப்படியான சைபர் குற்றங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் 2024 ஆம் வருடம் உலகம் முழுவதும் பொருளாதாரம் மந்த நிலை ஏற்படும் எனவும் கணித்திருந்தார். இவரது கணிப்பு படியே உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இவரது கணிப்பின்படி 5079 ஆம் வருடம் உலகம் முற்றிலுமாக அழியும் என கணித்திருக்கிறார். இந்த வருடத்தில் உலகம் அழியும் என்று இவர் கணித்ததால் அதற்குப் பிறகு எந்த ஒரு கணிப்பையும் மேற்கொள்ளவில்லை. இவரது கணிப்புப்படி உலகம் அழிவதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கிறது. எனினும் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.