உலகமகா உருட்டு.. 65 வயது மூதாட்டியை காதலிப்பதாக நடித்து ரூ.25 இலட்சம் மோசடி; விண்ணில் இருந்து பறந்து வந்து கரம் பிடிப்பாராம்...! 



Japanese Woman Cheated by Fake Astronaut Promise Marriage Return Earth From Space

இன்ஸ்டாகிராமில் பழகி மூதாட்டியை விண்ணில் இருந்து வந்து திருமணம் செய்வதாக மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஹோன்ஷூ மாகாணத்தின் Shiga நகரில் வசித்து வரும் 65 வயது பெண்மணி Yomiuri Shimbun. இவருக்கு கடந்த ஜூனில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆணொருவரின் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை ரஷிய விண்வெளி வீரர் என்று அறிமுகம் செய்து, தான் விண்ணில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், மூதாட்டியை காதல் வலையில் வீழ்த்துவது போல பேசிய மர்ம நபர் தனது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். மேலும், நான் பூமிக்கு திரும்ப விரும்பும் நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு வர பணம் செலவாகும். நான் பூமிக்கு வந்ததும் ஜப்பான் வந்து உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

Japanese Woman

போலியான கணக்கில் பேசிய நபரின் பின்னணி அறியாத பெண்மணி, ஜூன் மாதம் பழக தொடங்கி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் என 5 தவணையாக 4.4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24,84,314) அனுப்பி வைத்துள்ளார். ஒருகட்டத்தில் கயவனின் தொல்லை அதிகரிக்க, பெண்மணி சுதாரித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதன்பின்னரே இத்தகவல் உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இதனை உலகளாவிய மோசடி என கூறி இருக்கின்றனர். உள்ளூரில் இருக்கும் காதலனை நம்பி ஆயிரங்கள் கொடுத்தாலே அவனை கையில் பிடிக்க இயலாது., இதில் விண்வெளியில் இருக்கும் காதலனை நம்பி கோடிக்கணக்கில் பணம் அனுப்பிய பாட்டியின் செயல் பதறவைத்துள்ளது.