கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு.! அமெரிக்காவில் இருந்து வருகிறது மருந்து.! ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சாதனை.!



Johnson and Johnson wants to start testing its coronavirus vaccine by September

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு சிறந்த மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கவும் உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகிறது.

corono

இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சிறந்த மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது எனவும், மூன்று மாத ஆராய்ச்சியின் பலனாக சிறந்ததொரு கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

corono

மேலும், வரும் செப்டம்பர் முதல் இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசு அங்கீகாரம் பெற்று உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருப்பதாக கூறும் அந்நிறுவனம், மருந்து தயாரான பிறகு உலகம் முழுவதும் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டு மருந்து உற்பத்தி வேகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால் அந்நிறுவனத்தின் பங்குகள்  ஒரே நாளில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.