#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி மரணம்.!
நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில், 19 மாடிகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலத்தில் நேற்று திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது.
இதனையடுத்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு 200 க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திரு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 32 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.