மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பணியாளர்கள் சென்ற பேருந்து மீது இரயில் மோதி பயங்கர விபத்து.. 6 பேர் பலி.!
பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த நிலை தோல்வியை அடைந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியாகினர்.
நைஜீரிய நாட்டில் உள்ள லாகோஸ் நகரில் இருந்து 100 க்கும் மேற்பட்ட அரசு பணியார்களை ஏற்றிய பேருந்து, அலுவலகத்திற்கு பயணம் செய்துகொண்டு இருந்தது.
அப்போது, அவ்வழியே இகெஜா பகுதியில் இரயில் தண்டவாளத்தை கடந்து பேருந்து செல்ல முயற்சித்துள்ளது. ஆனால், இரயில்வே தண்டவாளத்தை விரைந்து கடக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் அவ்வழியே வந்துவிட, இரயில் பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகி நின்றுள்ளது.
பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் நடந்த விபத்தில் 6 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.