காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
நைஜீரியா:.. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 110 பேர் தீயில் கருகி மரணம்.!
ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரியா, Port Harcourt டெல்டா பகுதியில் உள்ளது. இங்கு அதிகளவிலான பெட்ரோலிய மற்றும் எண்ணெய் வளம் சார்ந்த சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை அனுமதியின்றி செயல்படுகிறது என்று உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் பைப்கள் வழியே சமூக விரோத கும்பல் அதனை திருடவும் செய்து வரும் நிலையில், சில நேரங்களில் அது பெரும் விபத்திற்கு வழிவகை செய்து வருகிறது.
More than 100 killed at #Nigerian illegal oil refinery blast - Authorities say victims ‘burnt beyond recognition’ in explosion at bunkering site in Imo state https://t.co/ZXv7b9YyAj
— LawNewsIndex.com (@TheLawMap) April 24, 2022
நேற்று முன்தினமும் எண்ணெய் குழாயை சேதப்படுத்திய கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபடும்போது, எதிர்பாரதமாக தீ பற்றிவிட்டதாக தெரியவருகிறது. இதனால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 110 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.