காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
160 அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்ற ஆயுதமேந்திய குழு; நைஜீரியாவில் பயங்கரம்.!
ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டில், அரசுக்கும் - ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக வலம்வரும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
அவ்வப்போது மத ரீதியான தாக்குதல்களும் அங்கு தலைதூக்கும் நிலையில், கிராமங்களுக்குள் சில நேரம் பயங்கரவாதிகள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்துவதை தொடர்கதையாக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடக்கு பகுதியில் Plateau மாநிலத்தில் உள்ள போக்கோஸில் கிராமத்தில், கால்நடை வளர்ப்பு தொடர்பான பிரச்சனையில் நடந்த இருதரப்பு மோதல் 160 பேரை கொலை செய்ய காரணமாக அமைந்துள்ளது.
பழங்குடியின மக்களின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் குழு, வீட்டில் இருந்த பொதுமக்களை நோக்கி நடத்திய துப்பாக்கிசூடில் 160 பேர் பரிதாபமாக பலியாகினர். 300 க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.