#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்பு திடீரென நிர்வாணமாக போராட்டம் நடத்திய மக்கள்! காரணம் என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தின் முன்பு 100க்கும் மேற்பட்டோர் திடீரென நிர்வாணமாக போராட்டத்தில் குதித்தனர்.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்கள் தற்போது மிகவும் தணிக்கை செய்யப்படுகின்றன. நிர்வாணமாக பதிவிடப்படும் புகைப்படங்களுக்கு உடனே தடை வித்திக்கப்பட்டு நீக்கப்படுகிறது.
இதனால் பல நுண்கலை வல்லுநர்கள் பாதிக்கப்படுவதாக பிரபல ஓவியர் சென்சர் டனிக் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தின் முன்பு நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். சென்சார் டனிக் நிர்வாண ஓவியங்கள் வரைவதில் வல்லுநர்.
இதற்கான காரணத்தை விளக்கியுள்ள டனிக், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளால் என்னைப் போன்ற நுண்கலை வல்லுநர்கள் தங்கள் ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட முடிவதில்லை. எங்களின் உண்மையான கலைத் திறமையை மறைத்து தான் புகைப்படங்களை பதிவிட முடிகிறது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் எந்த ஒரு படைப்பையும் விளம்பரம் செய்வதற்கு சமூக வலைத்தளங்கள் நிச்சயம் தேவைப்படுகிறது. அப்படியிருக்க ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் எங்களது புகைப்படங்களை தடை செய்தால் எங்கள் திறமையை எப்படி வெளி உலகிற்கு வெளிப்படுத்த முடியும்.
இதனை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிர்வாண போராட்டத்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். ஸ்பென்சர் டனிக்கின் ஃபேஸ்புக் பக்கத்தை 2014 ஆம் ஆண்டிலேயே ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.