யாத்ரீகர் வேடத்தில் அரபு நாடுகளுக்கு படையெடுக்கும் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள்: பொருளாதார பிரச்சனையால் அவலம்.!



Pakistan Beggars Arrested in Arab Emirates 

 

பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் வேலையின்மை, வருமானமின்மை, குடும்ப சூழ்நிலை உட்பட பல்வேறு காரணங்களால் அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக புலம்பெயர்ந்து வருகின்றனர். 

இவர்கள் முறைகேடான வழிகளை பயன்படுத்தி சவுதி அரேபியாவுக்குள் குடிபெயர்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் தங்களிடம் இருக்கும் இறுதியான பணத்தை வைத்து சவுதி அரேபியாவுக்கு யாத்திரிகர் பெயரில் சென்று, அங்கே பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே 16 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை சவுதி அரேபியா கைது செய்துள்ளது. சவுதி அரேபியாவை பொறுத்தமட்டில் பிச்சை எடுப்பது குற்றமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், 16 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை சவுதி கைது செய்துள்ளது. மேலும், முன்னதாகவே சவுதி அரேபியா பாகிஸ்தானில் இருந்து திருடர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை யாத்திரிகர் வேடம் போட்டு இங்கு அனுப்ப வேண்டாம் என்று எச்சரித்து இருந்தது. அந்நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களில் 90 விழுக்காடு பாகிஸ்தானியர்கள் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.