பாகிஸ்தானில் ஏலியன்கள் நடமாட்டமா?.. வானில் தோன்றிய மர்ம பொருளால் பேரதிர்ச்சி.. பகீர் வீடியோ.!



Pakistan Islamabad Man Arslan Warraich Captured UFO Video Goes Viral

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத் நகரில், நேற்று சுமார் 2 மணிநேரம் மர்ம பொருள் ஒன்று வானில் சுற்றி வந்துள்ளது. இதனை கவனித்த அர்ஸ்லான் வாரைச் (வயது 33) என்பவர், வானில் பறந்த மரம் பொருளை தனது கேமிராவில் பதிவு செய்துள்ளார். 

வானில் பறந்த மர்ம பொருள் பார்க்க ஒழுங்கற்ற முக்கோண அமைப்பில், என்னவென்று விளக்க இயலாத வரையில் இஸ்லாமாபாத் நகரில் 2 மணிநேரம் வலம்வந்துள்ளது. இந்த மர்ம பொருளின் வீடியோ பதிவு 13 நிமிடமே காட்சிப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது என்ன என்பதற்கான விளக்கம் இல்லை. 

சிலர் அந்த மர்ம பொருள் பறவைகளின் கூட்டமைப்பாக இருக்கலாம் அல்லது டிரோன் போன்ற பொருளாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த அர்ஸ்லான் பறவை கூட்டம் மற்றும் டிரோன் போன்ற கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே பலகேரிய நாட்டினை சேர்ந்த மறைந்த பாபா வாங்கா என்ற பெண்மணி, தனது வாழ்நாள் குறிப்புகளில் 2022 ஆம் வருடத்தில் வேற்றுகிரக வாசிகள் பூமியில் வெளியுலகுக்கு தென்படுவார்கள் என்று தெரிவித்து இருந்த நிலையில், இந்த பகீர் சம்பவமும் நடந்துள்ளது.